வாக்கு சீட்டின் நீளம் அதிகரிப்பு

இலங்கை சோஷலிச குடியரசின் 8 ஆவது ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று முடிவடைந்த நிலையில் இலங்கை ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக 35 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

அந்தவகையில் தற்போது ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குச் சீட்டின் நீளம் தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவித்துள்ளது.

அதன்படி குறித்த வாக்குச் சீட்டானது 66.4 சென்ரிமீற்றர் (26 இன்ச்) கொண்டதாக அமையும் என தேர்தல் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

அத்தோடு நாடு முழுவதும் 11,000 வாக்குச்சாவடி நிலையங்கள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: ஈழவன்