நாடாளுமன்றில் மண் சரிவு

நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் காணப்படும் பூந்தோட்டத்தின் மண்மேடு சரிந்து தியவன்னா ஓயாவில் வீழ்ந்துள்ளது

சுமார் 20 அடி உயரமான மண்மேடு இவ்வாறு சரிந்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபைக்குள் பிரசன்னமாகும் நுழைவாயிலுக்கு அருகிலுள்ள பூந்தோட்டத்திலேயே இவ்வாறு மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.

தொடர்ந்து பெய்த மழை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதுடன், தற்போது குறித்த பகுதிக்கு புவிசரிதவியல் திணைக்களத்தின் அதிகாரிகள் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது


Recommended For You

About the Author: ஈழவன்