இரண்டு மாதத்திற்கு பின் மீண்டும் இருப்பிடம் வந்த மோனா-லிசா..!!

லூவர் அருங்காட்சியகத்தில் இன்று திங்கட்கிழமை காலை முதல் மோனா-லிசே ஓவியத்தை பொதுமக்கள் வழமையான இடத்தில் பார்வையிடலாம்.

திருத்தவேலை காரணமாக இடமாற்றம் செய்யப்பட்டதன் பின்னர் இன்று மீண்டும் தனது இடத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

ஓவியர் லியனார்டோ டாவின்சி வரைந்த 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த ஓவியம் வருடம் முழுவதும் பல மில்லியன் பயணிகளை பரிசுக்கு இழுக்கின்றது.

ஓவியம் அமைக்கப்பட்டிருந்த வழமையான அறை கடந்த 15 வருடங்களாக திருத்தவேலை கண்டிருக்கவில்லை.

இதனால் மிக அதிகமான பார்வையாளர்கள் கூடும் நேரத்தில் அந்த அறை அத்தனை சிறந்த அனுபவத்தை தரவில்லை என பல விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் திருத்தபணிகள் ஆரம்பிக்கப்பட்டது.

அப்போது இடமாற்றம் செய்யப்பட்டிருந்த மோனா-லிசா ஓவியம், இன்று காலை முதல் மீண்டும் வழமையான இடத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: Editor