முடிவடைந்தது நீராவியடி விவகாரம்!!

முல்லைத்தீவு – செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயம் தொடர்பாக முல்லைத்தீவு நீதவானால் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிரான மேன்முறையீடு வழக்கு மற்றும் மீளாய்வு வழக்கு நடைபெற்றுள்ளன.

வவுனியா மேல் நீதிமன்றத்தில் இன்று குறித்த வழக்குகள் இடம்பெற்றிருந்தன.

மேல்முறையீட்டு வழக்கினுடைய, முதலாவது தரப்பினராகிய பௌத்த பிக்கு மரணம் அடைந்த காரணத்தினால் அந்த வழக்கின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இவ் விடயம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மீளாய்வு மனுவும், பௌத்த பிக்குவின் மரணம் தொடர்பான மரண சான்றிதழ் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதன் அடிப்படையில் ரத்து செய்யப்பட்டது.

அந்தவகையில், வவுனியா மேல் நீதிமன்றத்திலே இடம்பெற்று வந்த செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயம் சம்பந்தமான இரண்டு வழக்குகளும் முடிவுக்கு வந்ததாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்திருந்தனர்.


Recommended For You

About the Author: Editor