சுவர்களில் ஒட்டப்பட்ட பணத்தாள்களை நன்கொடையாக வழங்கிய உணவகம்!

ஃபுளோரிடாவில் உள்ள உணவகம் ஒன்றில் சுவர்கள், தூண்கள், மேற்கூரைகள் என ஓரிடம் விடாமல் பணத்தாள்களை ஒட்டிவிட்டுச் செல்வது அங்கு வரும் சில வாடிக்கையாளர்களின் வழக்கமாகும்.

குறிப்பாக உணவகத்தில் தமது சுவையான உணவினை பெற்ற பின்னர் நன்கொடையாக குறித்த பணத்தாள்கள் ஒட்டிச் செல்கின்றனர்.

இந்தநிலையில், அண்மையில் டொரியன் சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குறித்த நிதி அனைத்தையும் அந்த உணவகம் நன்கொடையாக வழங்கியுள்ளது.

Siesta Key Oyster Bar என்ற குறித்த உணவகத்திற்கு வாடிக்கையாக வரும் மீனவர்கள் பணத்தாள்களை முதலில் ஒட்டத் தொடங்கியுள்ளனர்.

அதன்பின்னர் அவர்களுக்கு மீன் பாடு அமையாத காலகட்டத்தில் தாம் ஒட்டிய பணத்தாளை பயன்படுத்தி பானம், அல்லது உணவை பெற்றுக்கொள்ளலாம் என்பது அதற்குக் காரணமாகும்.

இந்த நிலையில், டொரியன் சூறாவளி நிவாரணத்திற்காக பல ஆண்டுகளாக ஒட்டப்பட்ட ஒரு டொலர் பணத்தாள்கள் அனைத்தையும் சுவர்களிலிருந்து அகற்ற சுமார் ஒருமாதம் பிடித்ததாக உணவக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, உணவகத்திலிருந்து வசூலித்த பணத்தாள்களின் மதிப்பு 14,000 அமெரிக்க டொலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுக்கட்டாக சேகரிக்கப்பட்ட பணத்தாள்கள் பஹாமாஸ் செஞ்சிலுவைச் சங்கத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: Editor