பேருந்துகள் நேருக்குநேர் மோதியதில் விபத்து!

மாத்தறை, அக்குரஸ்ஸ – காலி வீதியில் அரச பேருந்தும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 20 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் கராபிட்டி போதனா வைத்தியசாலை, இமாடுவ வைத்தியசாலை மற்றும் அக்குரஸ்ஸ வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு இந்த விபத்து குறித்து மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.


Recommended For You

About the Author: Editor