பரிசை முற்றுகையிட்ட பெண்கள்! – 74,000 பேர் கலந்துகொண்டதாக அறிவிப்பு..!!

நேற்று ஞாயிற்றுக்கிழமை பரிசை பல்லாயிரக்கணக்கான பெண்கள் முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

procréation médicalement assistée (PMA) எனும் திட்டத்தினை எதிர்த்து பெண்கள் மற்றும் ஆண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்தவருடமும் இது போல் மிக பிரம்மாண்டமான ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி இடம்பெற்றதை அடுத்து, இவ்வருடமும் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அதைத் தொடர்ந்து நேற்றைய ஆர்ப்பாட்டத்தில் எதிர்பார்த்ததை விட அதிகமானோர் கூடியதாக அமைப்பினர் தெரிவித்தனர். கைகளில் பச்சை மற்றும் சிவப்பு நிற கொடிகளை பிடித்துக்கொண்டு “சுதந்திர சமத்துவம் தந்தைவழி” எனும் தொனிப்பொருளில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம் மிக அமைதியாக இடம்பெற்றது. Luxembourg (செனட் மேற்சபைக்கு அருகே) தோட்டத்தில் இருந்து ஆரம்பித்த இந்த ஆர்ப்பாட்டம் Montparnasse கோபுரத்துக்கு அருகே சென்றடைந்தனர்.

நேற்றைய ஆர்ப்பாட்டத்தில் 600,000 பேர் கலந்துகொண்டதாக அமைப்பினர் தெரிவித்திருந்த போதும், தனியார் நிறுவனம் ஒன்று மேற்கொண்ட கணக்கெடுப்பில் 74,500 பேர் கலந்துகொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: Editor