கொலையுதிர் காலம்’ படத்திற்கு நீதிமன்றம் தடை!!

சக்ரி டோலட்டி இயக்கத்தில் நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகியள்ள ‘கொலையுதிர் காலம்’ திரைப்படத்தை வெளியிடுவதற்கு, சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

இந்த வழக்கு நேற்று (செவ்வாக்கிழமை) விசாரணைக்கு எடுக்கப்பட்ட நிலையில் படத்தை வெளியிடுவதற்கு இடைக்காலத் தடை விதித்து, எதிர்வரும் 21ஆம் திகதிக்குள் பதிலளிக்குமாறு திரைப்படத் தயாரிப்புக் குழுவிற்கு நீதிமன்றம் உத்தரவுவிட்டுள்ளது.

இயக்குநர் பாலாஜி குமார், மறைந்த எழுத்தாளர் சுஜாதா எழுதிய கொலையுதிர் காலம் என்ற நாவலை சுமார் 10 இலட்சம் ரூபாவிற்கு வாங்கி உரிமை பெற்றிருந்துள்ளார்.

இத்திரைப்படம் எதிர்வரும் 14ஆம் திகதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில் ‘கொலையுதிர் காலம்’ என்ற தலைப்பில் படத்தை வெளியிடுவது காப்புரிமையை மீறிய செயல் எனக் கூறி இத்திரைப்படத்தை வெளியிடுவதற்குத் தடை விதிக்க வேண்டும் என இயக்குநர் பாலாஜி குமார் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor