அமெரிக்க குழு முகமாலை பகுதிக்கு விஜயம்!

முகமாலைப் பகுதியில் அமெரிக்க நிதியுதவியுடன் முனனெடுக்கப்பட்டு வரும் கண்ணிவெடி அகற்றும் பணிகளை, அமெரிக்க நாட்டின் திட்ட முகாமையாளர் உள்ளிட்ட குழுவினர் பார்வையிட்டனர்.

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட முகமாலை மற்றும் அரசர்கேணி ஆகிய பகுதிகளில் சர்வதேச நிறுவனங்களின் நிதியுதவியுடன், டாஸ் மனித நேயகண்ணி வெடி அகற்றும் நிறுவனத்தினால் நிலக்கண்ணி வெடிகள் அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

டாஸ் மனிதநேய கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தினால் முகமாலைப் பகுதியில் அமெரிக்க நாட்டின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் கண்ணிவெடி அகற்றும் பணிகளை, அமெரிக்க நாட்டின் திட்ட முகாமையாளர் உள்ளிட்ட தூதரக அதிகாரிகள் தலைமையிலான குழுவினர் இன்று (திங்கட்கிழமை) சென்று பார்வையிட்டுள்ளனர்.

குறித்த பகுதிக்கு சென்ற குழுவினர், குறித்த பகுதிகளின் நிலமைகள் தொடர்பாகவும் வெடிபொருட்களை அகற்றும் பணிகளின் போது எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் கேட்டறிந்து கொண்டனர். அத்தோடு, கண்ணிவெடி அகற்றும் பணிகளையும் நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளனர்.

குறித்த பகுதிகளில் தனியாருக்கு சொந்தமான விவசாய நிலங்கள், குடியிருப்பு காணிகள் மற்றும் அரச காணிகள் உள்ளிட்ட அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் நிலக்கண்ணி வெடிகள் அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor