பிரித்தானியாவில் கவனயீர்ப்பு போராட்டம்.!📷

இலங்கைத்தீவில் இறுதிப் போரின் போது கையளிக்கபட்டு காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்களுக்காகவும் போரின் போது திட்டமிடப்பட்டு பெளத்த சிங்கள பேரினவாத அரசினால் கொல்லபட்ட அப்பாவி சிறுவர்களுக்காகவும் நீதி வேண்டி பிரித்தானிய பிரதமரின் அலுவலகத்திற்கு முன்பாக நேற்று (06/10/2019) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றது.
சர்வதேச சிறுவர்கள் தினத்தினை (அக்டோபர் 01) முன்னிட்டு இப் போராட்டமானது மதியம் 1.30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டு மாலை வரை நடைபெற்றது.
மேலும் கடும் குளிருக்கும் காற்றுக்கும் மத்தியில் இப் போராட்டத்தில் சிறுவ‌ர்க‌ள், பொதுமக்கள் ம‌ற்று‌ம் அமைப்புக்களைச் சார்ந்தவர்களும் பங்கு பற்றி தங்களின் ஆதங்கங்களை சர்வதேசத்திற்கு வெளிபடுத்தும் வகையில் குரல்களை எழுப்பிக் கொடுத்தார்கள்.
சர்வதேச சிறுவர்கள் தினத்தினை (அக்டோபர் 01) முன்னிட்டு இப் போராட்டமானது மதியம் 1.30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டு தற்போது வரை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
மேலும் கடும் குளிருக்கும் காற்றுக்கும் மத்தியில் இப் போராட்டத்தில் சிறுவ‌ர்க‌ள், பொதுமக்கள் ம‌ற்று‌ம் அமைப்புக்களைச் சார்ந்தவர்களும் பங்கு பற்றி தங்களின் ஆதங்கங்களை சர்வதேசத்திற்கு வெளிபடுத்தும் வகையில் குரல்களை எழுப்பிக் வெளிப்படுத்தினார்கள்.

Recommended For You

About the Author: Editor