சம்பளத்தை திறைசேரிக்கு கொடுப்பேன் .

தான் ஜனாதிபதியாக தெரிவானால் நெல்லுக்கான 50 ரூபா நிர்ணய விலையை சட்டமாக்குவதாக ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவையில் நேற்று (06) இடம்பெற்ற விவசாய சம்மேள கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
எதிர்வரும் நாட்களில் விவாசாய கொள்கை பிரகடனம் ஒன்றை ஏற்படுத்தவுள்ளேன். அதில் நானும் நீங்களும் கையொப்பம் இடவேண்டும். விவசாயிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சமூக உடன்பாடொன்றை ஏற்படுத்திக்கொண்டு அதில் குறிப்பிடபட்டுள்ளவாறு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

நெல்லுக்கான உத்தரவாத விலையை நாம் சட்டமாக்கி 50 ரூபா உத்தரவாத விலையை பெற்றுக்கொடுக்க அர்ப்பணிப்புடன் செயற்படுவேன்.

அதேபோல் விவசாய ஓய்வூதியதிட்டத்திற்கு மீண்டும் புத்துயிர் அளிப்பது மாத்திரம் அல்லாமல் அழிவடையும் விளைசலுக்கு காப்புறுதியை வழங்குவேன்.

எனது ஆட்சி காலத்தில் மீள் ஏற்றுமதிக்கு வாய்ப்பளிக்கப்படமாட்டாது. ஊழல் இல்லாத ஆட்சியின் பொற்காலமாக சஜித்தின் ஆட்சி அமையும்.

ஜனாதிபதியாக நான் ஒரு போதும் சம்பளம் அல்லது கொடுப்பனவுகளை பெற போவதில்லை அவை அனைத்தையும் திறைசேரிக்கு நன்கொடையாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்´ என்றார்.


Recommended For You

About the Author: ஈழவன்