முகமூடிக்கு தடை விதித்ததையடுத்து வன்முறை தீவிரம்.

ஹொங்கொங்கில் முகமூடிகளுக்கு எதிராக அரசு விதித்த தடை சட்டத்தை நீக்க நீதிமன்றம் மறுத்து விட்டதால் தீவிரமடைந்து வரும் மக்கள் போராட்டம் பல பகுதிகளில் வன்முறையாக மாறியது.

முகமூடிகளுக்கு எதிரான சட்டத்தை எதிர்த்து ஹொங்கொங் நீதிமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சார்பாக தொடரப்பட்ட வழக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தள்ளுபடி செய்யப்பட்ட நிலையிலேயே வன்முறை சம்பங்கள் இடம்பெற்றுள்ளன.

ஹொங்கொங்கில் குற்ற வழக்குகளில் சிக்குபவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி, வழக்கு விசாரணையை முன்னெடுக்க ஏதுவாக கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டுவர ஹொங்கொங் நிர்வாகம் முடிவு செய்ததை்த தொடர்ந்து ஆரம்பிக்கப்பட்ட மக்கள் போராட்டம் பல்வேறு வடிவங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டன.

இதையடுத்து குறித்த திருத்தச்சட்டம் நீக்கப்பட்ட பின்னரும் சீனாவின் ஆதிக்கத்திலிருந்து  ஹொங்கொங்கை விடுவிக்குமாறு கோரி தொடர்ந்தும் பேல்வெறு நகரங்களில் போராட்டங்கள்இடம்பெற்று வருவதோடு, வன்முறைகளும் இடம்பெறுகின்றன.

இந்நிலையில், பொலிஸார் தங்கள் அடையாளங்களை கண்டுபிடித்துவிடக் கூடாது என்பதற்காக போராட்டக்காரர்கள் முகமூடிகளை அணிந்துகொண்டு போராடி வருகின்றனர். இப்படி முகமூடிகளை அணிந்து போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கட்டுப்படுத்த புதிய சட்டத்தை கேரி-லாம் அரசு நடைமுறைப்படுத்தியது.

இவ்வாறு முகமூடிகளை அணிவது சட்ட விரோதம் என்ற அவசர சட்டம் தொடர்பான அறிவிப்பால் போராட்டக்காரர்களின் வேகம் பல மடங்கு அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


Recommended For You

About the Author: ஈழவன்