லான்சோ துறைமுகம்-தெற்காசிய சந்தை இணைப்பு

கான்சூ மாநிலத்திலுள்ள லான்சோ தரைத் துறைமுகம், நேபாளத்துடன் சீனாவை இணைக்கும் 3 தரைத் துறைமுகங்களில் ஒன்றாகும்.

கடந்த சில ஆண்டுகளில், இத்துறைமுகத்துக்கும் காத்மாண்டு, இஸ்லாமாபாத் உள்ளிட்ட தெற்காசிய நகரங்களுக்கும் இடையில் வர்த்தகப் பாதைகள் அடுத்தடுத்து உருவாக்கப்பட்டுள்ளன.

அதன் மூலம், இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் ஆகிய 7 தெற்காசிய நாடுகளுடன் சீனா பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் அதிகமாக மேற்கொண்டு வருகின்றது.

தற்போது, லான்சோ சர்வதேசத் தரைத் துறைமுகத்திலிருந்து மத்திய ஆசியா, மத்திய ஐரோப்பா, தெற்காசியா, சிங்கப்பூர் ஆகிய 4 பெரிய பன்னாட்டு வர்த்தகப் பாதைகள் சுறுசுறுப்பாக இயங்கி அதிகப் பயன்களை அளித்து வருகின்றன.


Recommended For You

About the Author: Editor