ஹொங்கொங்கில் ஆர்ப்பாட்டம்

ஹொங்கொங்கில் மாபெரும் ஆர்ப்பாட்டம் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், பொலிஸ் மற்றும் பாதுகாப்பு துறையைச் சேர்ந்த சுமார் 5,000 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஹாங்காங்கில் சந்தேக நகர்களை சீனாவிடம் ஒப்படைக்க அனுமதிக்கும் சர்ச்சைக்குரிய சட்ட மூலம் குறித்து இன்று (புதன்கிழமை) உள்ளூர் நேரப்படி 11 மணியளவில் ஹொங்கொங் சட்டமன்ற உறுப்பினர்கள் விவாதிக்கவுள்ளனர்.

அரசியல் எதிர் கருத்து உடையவர்களுக்கு எதிரானது என கருதப்படும் குறித்த சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கானவர்கள் இன்று அதிகாலை முதல் அரச அலுவலகங்கள், பொது இடங்கள், வீதிகள் என்பற்றில் முகமூடிகள் மற்றும் தலைக்கவசங்களை அணிந்த வண்ணம் ஒன்று கூடியுள்ளனர்.

சட்டமன்ற வளாகத்தைச் (Legislative Council) சுற்றி பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது. 2,000க்கும் மேற்பட்ட வர்த்தக நிறுவனங்கள் இன்று பணிநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளன. பன்னாட்டு நிறுவனங்கள் பலவும் தங்களது ஊழியர்களின் விருப்பத்துக்கு அனுமதிப்பதாக தெரிவித்துள்ளன.

இந்தநிலையில், போராட்டங்கள் வெடிக்கும் பட்சத்தில் அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் பொலிஸார் மிளகு விசிறல் போன்றவற்றை தயார் நிலையில் வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: Editor