இராணுவத்தினர் ரயில் ஓட்டுனர்களாக அனுமதி!!

இராணுவத்தினரை ரயில் ஓட்டுனர்களாக பயிற்றுவிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அமைச்சர் அசோக் அபேசிங்க இதுகுறித்த உத்தியோகப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளார்.

இராணுவத்தளபதியினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாளை முதல் காரியாலய ரயில்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கான வாய்ப்பு காணப்படுவதாக அமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சம்பள முரண்பாட்டு பிரச்சினையை தீர்க்குமாறு கோரி, ரயில் சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள், கண்காணிப்பாளர்கள் மற்றும் மேற்பார்வை அதிகாரிகள் ஆரம்பித்த பணிப்பகிஷ்கரிப்பு இன்று 11வது நாளாக முன்னெடுக்கப்படுகின்றது.

ரயில் சேவை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதால், ஊழியர்களின் விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் உடனடியாக பணிக்கு சமூகமளிக்குமாறு ஊழியர்களை பொது முகாமையாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

எனினும், தமது சம்பள முரண்பாட்டிற்கு தீர்வு கிடைக்கும் வரை பணிப்பகிஷ்கரிப்பை கைவிடப்போவதில்லை என தொழிற்சங்கங்கள் கூறியுள்ளன.


Recommended For You

About the Author: Editor