வவுனியாவில் இராணுவம் சோதனை – மக்கள் பீதியில்

வவுனியாவில் இராணுவத்தினர் வீடு வீடாகச் சென்று திடீர சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டமையினால், மக்கள் பதற்றமான நிலைமையில் காணப்படுகின்றனர்.

வவுனியா- பூந்தோட்டம், மதீனாநகர் பகுதியில் திடீர் தேடுதல் நடவடிக்கையில் இராணுவத்தினர் நேற்று (சனிக்கிழமை) ஈடுபட்டிருந்தனர்.

இந்த தேடுதல் நடவடிக்கை அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தங்களது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதாகவும் மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை வவுனியாவில் புதிதாக இராணுவச் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, சோதனை நடவடிக்கைகள் நேற்று இடம்பெற்றன.

குறித்த சோதனை நடவடிக்கைகள் இன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இராணுவத்தினரும் விசேட அதிரடிப்படையினரும் தீவிரமான தேடுதல் மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று காலை, வவுனியா- ஈச்சங்குளம், பம்பைமடு, மகாறம்பைக்குளம் வீதி போன்ற பகுதிகளில் வீதியை மறைத்து பரல்கள் அடுக்கி தீவிரமாக மக்களை சோதனை செய்யும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டு இருந்தனர்.

இதேவேளை வவுனியா பழைய பேரூந்து நிலையத்தில் இராணுவத்தினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் வவுனியா நகர்ப்புறங்களில் விசேட அதிரடிப்படையினர் மோட்டார் வண்டியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்