தங்கத்தில் தயாரான உலக கிண்ணம்!!

இங்கிலாந்தில் இடம்பெற்று வரும் உலகக் கிண்ணத் தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை அடைந்துள்ள நிலையில், பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்தநிலையில், தென்னிந்திய விழுப்புரத்தை சேர்ந்த நகைத் தொழிலாளி ஒருவர், வெறும் 20 மில்லி கிராம் தங்கத்தில் கிரிக்கெட் உலகக் கிண்ணத்தைப் போன்ற வடிவமைப்பை தயார் செய்துள்ளார்.

2019 ஆம் ஆண்டுக்கான தொடரில் இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 10 நாடுகளின் அணிகள் பங்கேற்றுள்ளன. இதில் லீக் சுற்றின் முடிவில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இறுதிப்போட்டியில் வெல்லும் அணிக்கு உலகக் கிண்ணத்துடன் பரிசுத் தொகையும் வழங்கப்படும்.

இந்த நிலையில், வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்படும் உலகக் கிண்ணத்தைப் போன்று விழுப்புரத்தை சேர்ந்த நகை தொழிலாளியான ரமேஷ், 20 மில்லி கிராம் தங்கத்தில் உலக கிண்ணத்தை இந்திய மதிப்பில் வெறும் 60 ரூபாய் செலவில் தயாரித்துள்ளார்.

இந்த உலகக் கிண்ணம் ஒரு அரிசியின் உயரத்தை விட குறைவாக உள்ளது. இதேபோன்று கடந்த 2015-ம் ஆண்டில் 40 மில்லி கிராம் எடையில் உலகக் கிண்ணத்தை ரமேஷ் தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor