லெமிலியர் தோட்டத்தில் 20 லட்சம் பெறுமதியான கொங்கிரீட் பாதை

நுவரெலியா மாவட்டத்தின் அக்கரபத்தனை பிரதேச சபை நிர்வாக பிரிவுக்குட்பட்ட பல பிரதேசங்களில் பல அபிவிருத்தித் திட்டங்களுக்கான அடிக்கல் இன்றையதினம் நாட்டப்பட்டது.

குறிப்பாக ரட்ணகிரிய பாமஸ்ஸ்டல் தோட்டத்திற்கான 40 லட்சம் ரூபாய் செலவில் 1,200 அடி நீளமுள்ள கொங்கிரீட் பாதை அமைப்பதற்கும் லெமிலியர் தோட்டத்தில் 20 லட்ச ரூபா பெறுமதியான 600 அடி நீளமுடைய கொங்கிரீட் பாதைகளை அமைப்பதற்காகவும் அடிக்கல் நாட்டப்பட்டது.

வோல்ட்ரீம் தோட்டத்தின் கொணன் பிரிவிற்கு 20 தனி வீடுகளை நிர்மாணிப்பதற்கான அடிக்கல்லும் இன்று நாட்டப்பட்டது. அத்தோடு பம்பரகலை தேயிலை தொழிற்சாலையில் இருந்து இராணிவத்தை செல்லும் 2 கிலோமீற்றர் தூரம் உடைய பாதையினை காப்பட் இடுவதற்காக இரண்டரை கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது .

அதற்கமைய அதற்கான பணிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கும் வகையில் இன்றைய தினம் அடிக்கல் நாட்டப்பட்டது. குறித்த நிகழ்வில் அக்கரப்பத்தனை பிரதேச சபை உறுப்பினரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் உப தலைவருமான திரு வேலு சிவானந்தன் அக்கரப்பத்தனை பிரதேச சபை உறுப்பினர் திரு சுதாகர் மாவட்ட தலைவர் திரு யோகராஜ் மற்றும் அமைப்பாளர் பாபு ஆகியோருடன் மேலும் பலரும் கலந்துகொண்டிருந்தனர்

மலைநாட்டு புதிய கிராம அபிவிருத்தி சமூக அபிவிருத்தி அமைச்சின் ஊடாக கௌரவ அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் அபிவிருத்தித் திட்டங்களுக்கான இன்றையதினம் அக்கரப்பத்தனை பிரதேச சபை உறுப்பினர் அவர்களால் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. ( லிந்துல. சுரேஸ்)


Recommended For You

About the Author: Editor