காஷ்மீர் இயல்பு நிலை முடக்கம்!

இந்தியாவின் – காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து இரத்து செய்யப்பட்ட நிலையில் இதன் நேரடி மற்றும் மறைமுகத் தாக்கங்களால் சுமார் 10 இலட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஒகஸ்டு 5ஆம் திகதி காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்தை இந்திய மத்திய அரசு இரத்து செய்தது.

இதனை தொடர்ந்து பாதுகாப்புக்காக வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் வெளியேறுமாறு மத்திய அரசு உத்தரவிட்டது.

இதனால் அங்கு சுற்றுலா சென்று இருந்த பயணிகள் மற்றும் 4 இலட்சத்துக்கும் மேற்பட்ட வெளிமாநிலத்தை சேர்ந்த கூலித்தொழிலாளர்களும் வெளியேறினர்.

காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்தவர்களும் பணிக்கு செல்லவில்லை. மேலும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளி மாநில தொழிலாளர்களும் இன்னும் வேலைக்கு திரும்பவில்லை.

மாநிலத்தில் பல்வேறு துறைகள் முடங்கி இருப்பதால் 10 இலட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

காஷ்மீரில் இதுவரை இயல்பு நிலை திரும்பாததால் இவ்வாறான பாதிப்புக்கள் மேலும் தொடரும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: Editor