எலி காய்ச்சல் தொடர்பில் விழிப்பாக இருங்கள்

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் எலி காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாக சுகாதார பரிசோதகர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்த சங்கத்தின் செயலாளர் மஹேந்திர பாலசூரிய இதனை தெரிவித்தார்.

இந்த நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பு சிகிச்சை நடவடிக்கைகள் இத்தினங்களில் முன்னெடுக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், இந்த நிலைமை குறித்து விவசாயிகள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.


Recommended For You

About the Author: ஈழவன்