இந்தியாவில் சுவர் இடிந்து 3 குழந்தைகள் உள்பட 5 பேர் பரிதாப பலி!

இந்தியாவின் அரியானா மாநிலத்தில் பாழடைந்த கட்டம் ஒன்று இன்று காலை இடிந்து அருகில் இருந்த குடிசை மீது விழுந்ததில் 3 குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பரிதாபமாக பலியாகினர்.

அரியானா மாநிலத்தின் அம்பாலா கன்ட் என்ற பகுதியில் உள்ள பாழடைந்த கட்டிடத்தின் அருகே குடிசை அமைத்து கட்டிடத்தொழிலாளி ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார்.

இந்நிலையில், கட்டிடத்தின் சுவர் இன்று அதிகாலை திடீரென இடிந்து குடிசை மீது விழுந்தது. இதில் அந்தக் குடும்பம் சிக்கிக்கொண்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால் சுவர் இடிந்து விழுந்ததில் குடிசையில் உறங்கிக்கொண்டிருந்த 3 குழந்தைகள் உள்பட 5 பேரும் சடலங்காளகவே மீட்கப்பட்டனர்.

இந்த விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


Recommended For You

About the Author: Editor