பெரமுனவில் இணைகிறார் சரத் பொன்சேகா!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா, மிக விரைவில் இணைவாரென நம்புவதாக கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சிசிர ஜயகொடி மேலும் கூறியுள்ளதாவது, “எதிர்வரும் நாட்களில் பொதுஜன பெரமுனவுடன் பல்வேறு தரப்பட்ட கட்சிகளும் வந்து இணைந்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்நிலையில் நாடு, இனம் மற்றும் மதம் குறித்து சரத்பொன்சேக்காவுக்கு மிகவும் தெளிவான சிந்தனையுள்ளது.

அந்தவகையில் அவரும் கூட, மிக விரைவில் எமது கட்சியுடன் வந்து இணைந்துக்கொள்ளுவாரென எதிர்பார்க்கின்றோம்” என குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இந்நிலையில் தேர்தலில் களமிறங்கவுள்ள வேட்பாளர் குறித்து ஒவ்வொரு கட்சியினரும் அறிவித்து வரும் நிலையில், பலர் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.

இந்நிலையில் தற்போது, முக்கிய கட்சிகளாக பார்க்கப்படுகின்ற பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக்கட்சி தங்களது கட்சியை பலப்படுத்தும் வகையில் ஏனைய பெரும்பாலான கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையிலேயே பொதுஜன பெரமுனவுக்கு சரத் பொன்சேகா ஆதரவு வழங்குவாரென நம்புவதாக  சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார்.


Recommended For You

About the Author: Editor