யாழில் வீதியைக் காணவில்லை…?

சிட்டிசன் என்று ஒரு தமிழ்த் திரைப்படம் அந்த திரைப்படத்தில் அத்திப்பெட்டி என்று ஒரு கிராமம் இந்திய வரைபடத்தில் இருந்து காணாமல் போனது போலான ஒரு சம்பவம் இங்கும் அதுவும் யாழ்.மாநகர சபை எல்லைக்கு நடைபெற்றுள்ளது.

யாழ்.மாநகர சபை வீதிகளின் பதிவேடுகளின் பிரகாரம் உள்ள மாநகர சபைக்குச் சொந்தமான வீதியென்று காணமல் போய் உள்ளது.

ஜிம்மா பள்ளிவாசல் வீதிக்கும் காங்கேசன் துறை வீதிக்கும் இடைப்பட்ட பகுதியில் காணப்பட்ட இவ்வீதி ஜிம்மா பள்ளிவாசல் வீதியில் தொடங்கி காங்கேசன் துறை வீதியில் முடிவடைகின்றது.

1997 ஆம் ஆண்டு இராணுவத்தினாரால் மூடப்பட்ட இவ் வீதி பின்னர் தனியாரியானல் வீதியின் இருபக்கமும் கேற் அமைத்து மூடப்பட்டது. அந்த கேற்களை யார் அமைந்தார்கள் என்று கூட யாழ்.மாநகர சபைக்கு இன்றும் தெரியாது.

கேற் அமைத்த பிற்பாடு அந்த வீதியில் தனியாரினால் அத்துமீற கட்டிங்கள் கட்டப்பட்டன, மலசகூடம் குளிப்பதற்கு ஏற்ற இடங்கள் என்பன காலப்போக்கில் அமைக்கப்பட்டன. அது மட்டுமின்றி ஒரு மிகப் பிரபல்யமான ரொப்பான உயர்தர உடுப்புக் கடையொன்றின் பாரிய மின்பிறப்பாக்கி ஒன்றும் அவ் வீதியில் அமைக்கப்பட்ட ஒரு கட்டிடத்தினுள் வைக்கப்பட்டுள்ளது.

தற்போது அந்த வீதியின் முடிவிடமான கே.கேஸ் வீதியில், அவ் வீதியின் முடிவிடத்தில் இனந்தெரியாத நபர்களால் போடப்பட்ட கதவு பூட்டு போடப்பட்டுள்ளது. நேற்று ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக அந்த இடத்திற்கு சென்றபோது ஒருவர் சர்வதாரணமா அந்த பூட்டினை திறந்து உள்ளே சென்று குளித்து விட்டு மீண்டும் பூட்டிவிட்டு செல்கின்றார்.
இது பற்றி மாநகர சபைகளில் தெரிவித்த போதும் அதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.

யாழ்.மாநகர சபை வீதியினை அபகரித்து அதற்கு கேற்போட்டு பூட்டி அதற்னுள் கட்டுமாணங்களை மேற்கொண்டு இன்றும் அவ் கேற்றினை திறந்து பூட்டி தங்களுடைய தேவைகளுக்கு யாழ்.மாநகர வீதியை அபகரித்த இக் கும்பல் பற்றி ஏன் யாழ்.மாநகர சபை இன்னமும் கவனம் செலுத்த வில்லை? இனந்தெரியாத நபர்கள் என்று ஒதுக்கிவிட முடியாது? யார் அந்த கேற்றைப் போட்டது தற்போது அந்த கேற்றை யார்திறந்து மூடி பாவிப்பது எந்த கடையின் மின் பிறப்பாக்கி அந்த வீதியில் உள்ளது போன்ற விடயங்கள் தெரிந்தும் யாழ்.மாநகர சபை இது தொடர்பில் ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.?

வங்கியிலே கடனைப் பெற்று தனது பூர்வீகமான குடியிருப்பினை திருத்த முற்பட்டால் அது யாழ்.மாநர சபையின் வீதி எல்லைகோட்டுக்குள் வந்து விட்டது அதனை உடைக்குமாறு கட்டளை பிறப்பிக்கின்ற யாழ்.மாநகர சபை , ஒரு தனியார் குழு யாழ்.மாநகர சபை வீதிகள் பதிவேட்டில் உள்ள ஒரு வீதியையே மூடி அவர்களின் பாவனைக்கு பயன்படுத்துவதனை அவ்வாறு அனுமதித்தது ? அல்லது அவ் வீதியை குறித்த தனியாருக்கு யாழ்.மாநகர சபை குத்தகைக்கு விட்டு விட்டதா?

நாங்களும் சபைகளில் இது போன்ற பல பிரச்சனைக்கு குரல் கொடுத்து விட்டோம் ஆனால் சபைகளில் தருகின்ற பதில்கள் சபையோடையே முடிந்து விடுகின்றது அதன் பிற்பாடு மறப்போம் மன்னிப்போம் தான். இனி மேலும் மௌனம் காக்கவோ அல்லது பொறுமை காக்கவோ முடியாது. இது தொடர்பிலான பல்வேறு மக்கள் பிரச்சனைகள் மக்களுக்கு பகீரங்கப்படுத்தப்படும். அது தொடர்பில் யாழ்.மாநகர சபை ஆளும் வர்க்கம் மக்களுக்கு பொறுப்புக் கூற வேண்டிய கடமைப்பாடு உள்ளது.

சபைகளில் எங்களை கௌரவ உறுப்பினர்கள் என்றே அழைக்கப்படுகின்றது. இந்த இடத்தில் கௌரவம் என்பதன் அர்த்தம் என்ன? எம் நம்பி எங்களை தங்கள் பிரநிதிகளாக சபைகளுக்கு அனுப்பிய மக்களின் தேவைகள் கௌரவமாக பதவி அந்தஸ்து பாராமல் தீர்க்கப்பட வேண்டும் எமது மக்களின் பிரச்சனைகள் தீர்காதவிடத்து சாமானிய மக்களின் தேவைகளை காலம் கடந்தும் நிலையில் இருந்து கொண்டு அவர்களின் பிரநிதிகளான எம்மை கௌரவ என்ற அடை மொழி கொண்டு அழைப்பது எவ்வகையில் நியாமானது. கௌரவம் என்ற சொற்பதத்தினை உறுப்பினர்கள் தங்களுக்கு அழைப்பது என்பதற்கு அப்பால் மக்கள் பிரதிநிதிகளாக எங்களை இச் சபைக்கு அனுப்பிய மக்கள் எங்களை கௌரவ உறுப்பினர்களாக ஏற்றுக்கொண்டுள்ளார்களா என்பதனை நாமே சுய பரிசோதனை செய்யப்பட வேண்டும். மக்களின் சிறு பிரச்சனைகளைக் கூட தீர்க்கமுடியாமல் அல்லல்படுகின்ற எமக்கு ஏன் கௌரவ பட்டடம்?

வீதி காணமல் போனது தொடர்பாக யாழ் மாநகர சபை எவ் நடவடிக்கையினை மேற்கொள்ளப்போகின்றது? அல்லது சட்டங்களும் நிபந்தனைகளும் தண்டனைகளும் சாமானிய மக்களுக்கு மட்டு;ம் தான் மாறாக அரசியல் இராணுவ செல்வாக்குகள் இருந்தால் இந்த மாநகரத்தில் யாரும் என்னவும் செய்யலாம் என்று வீதி காணாமல் போனது போல் கண்டும் காணாமல் இருக்க போகின்றதா?

வரதராஜன் பார்த்திபன்
யாழ்.மாநகர சபை உறுப்பினர்
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி


Recommended For You

About the Author: Editor