33 பேர் கட்டுப்பணம் செலுத்தினர்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரையில் 33 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக பணிப்பாளர் சமன் ரட்நாயக்க குறிப்பிட்டார்.

ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இந்நிலையில் தேர்தலில் களமிறங்கவுள்ள வேட்பாளர் குறித்து ஒவ்வொரு கட்சியினரும் அறிவித்து  வரும் நிலையில், பலர் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.

அதற்கமைய நேற்று (வெள்ளிக்கிழமை) வரையில் 33 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அமைச்சர் சஜித் பிரேமதாச, சமல் ராஜபக்ஷ உட்பட 5 பேர் நேற்று  கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னாயக்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி முன்னணி சார்பில் போட்டியிடுவதற்கு சஜித் பிரேமதாச கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.

சுயேட்சைக் குழுவில் போட்டியிடுவதற்காக சமல் ராஜபக்ஷவும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.

குமார வெல்கம, மஹேஷ் சேனநாயக்க, துமிந்த நாகமுவ ஆகியோரும் நேற்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


Recommended For You

About the Author: ஈழவன்