கனல் கக்கும் சினபுங் எரிமலை!!

இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் அமைந்துள்ள சினபுங் எரிமலை தொடர்ந்தும் வெடிக்கும் சாத்தியம் உள்ளதாக இந்தோனேசிய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

சினபுங் எரிமலை வெடிப்புகள் நேற்று (திங்கட்கிழமை) சுமார் 9 நிமிடங்களுக்கு நீடித்த நிலையில் இன்றும் எரிமலை பெரும் புகையுடன் வெடிப்புகளை வௌிப்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிமலையிலிருந்து அதிகமான சாம்பல் மற்றும் கரும்புகை வெளியானதைத் தொடர்ந்து, அதனை அண்டிய பகுதிகளைச் சேர்ந்த குடியிருப்பாளர்கள் பதற்றம் அடைந்துள்ளனர்.

சினபுங் எரிமலை சாம்பலை சுமார் 7 கிலோ மீட்டர் உயரத்திற்குக் கக்கிய போதும், யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் அடுத்தடுத்து வெடிப்புகள் ஏற்படும் சாத்தியம் உள்ளதால் இடர் முகாமைத்துவ அதிகாரிகள் எரிமலையைக் கண்காணித்து வருகின்றனர்.


Recommended For You

About the Author: Editor