உயிரிழந்த காவல்துறையினருக்கு அதிகாரிகள் மெளன அஞ்சலி..!!

காவல்துறை அதிகாரிகள் நால்வர் உயிரிழந்ததை அடுத்து, அவர்களுக்கான அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

நேற்றைய தினம் பரிஸ் காவல்துறை தலைமையகத்தில் இடம்பெற்ற தாக்குதலில் நான்கு காவல்துறையினர் உயிரிழந்தனர். இது தொடர்பான அனைத்து தகவல்களையும் முன்னதாகவே நாம் வழங்கியிருந்தோம்.

இந்நிலையில், உயிரிழந்த நான்கு காவல்துறையினருக்குமான அஞ்சலி நிகழ்வு, இன்று காவல்துறை தலைமையகத்தின் முற்றத்தில் இடம்பெற்றது.

இதில் உள்துறை அமைச்சர் Christophe Castaner, பொதுச் செயலாளர் Laurent Nunez மற்றும் பரிஸ் காவல்துறை தலைமை அதிகாரி Didier Lallement உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

உள்துறை அமைச்சர் Christophe Castaner உயிரிழந்த அனைத்து காவல்துறையினரின் குடும்பத்தினையும் சந்தித்தார். பின்னர் இது அனைத்து காவல்துறையினரின் சோகமும் கோபமுமாகும் என அவர் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்தார்.

11 மணி அளவில் 1 நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் ஏராளமான காவல்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


Recommended For You

About the Author: Editor