ஒட்டுக்குழு பிள்ளையான் கட்சியின் மக்கள் விரோத செயல்!

தமிழர்களது நிலங்கள் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் கபளீகரம் செய்யப்படுகின்றமைக்கு கோறளைப் பற்று பிரதேச சபை தவிசாளர் துணை போகின்றார் என்ற விடயத்தை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் துணிச்சலுடன் அம்பலப்படுத்தி நீதி கேட்டான் குணசேகரன்.

அதனால் அம்பலப்பட்டுப்போயுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி என்னும் மிகப் பயங்கரமான துணை இராணுவ ஒட்டுக்குழுவின் உறுப்பினரும் கோறளைப் பற்று பிரதேச சபை தவிசாளருமான பெண்மணி அரசியல் பழிவாங்கலில் ஈடுபட்டுள்ளார்.

இதற்காக ஐக்கிய தேசியக்கட்சி, கூட்டமைப்பின் ஒரு உறுப்பினர் உட்பட 17 பேரின் ஆதரவுடன் பிரேரணை நிறைவேற்றி குணசேகரை சபையை விட்டு வெளியேற்றியுள்ளார். அவரது சட்டத்திற்கு மாறான செயற்பாடுகளுக்கு சபையின் செயலாளரும் துணை போயுள்ளார்.

அன்றிலிருந்து இன்று வரைக்கும் தொடர்ச்சியாக தமிழர் விரோத போக்கிலேயே பிள்ளையானின் கட்சி செயற்பட்டு வருகின்றது


Recommended For You

About the Author: Editor