சமாதான நீதவான்கள் பேரவையின் மாநாடு!

இலங்கை சமாதான நீதவான்கள் பேரவை ஒழுங்கு செய்துள்ள கிழக்கு மாகாணத்திற்கான மாநாடு எதிர்வரும் ஒக்டோபர் 12ஆம் திகதி நடைபெறவுள்ளது.

அட்டாளைச்சேனை மீனோடைக்கட்டு சக்கி கூட்ட மண்டபத்தில் பேரவையின் தேசிய பணிப்பாளர் கலாநிதி பஹத்.ஏ.மஜீத் தலைமையில் குறித்த மாநாடு இடம்பெறவுள்ளது.

அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட மற்றும் முழுத்தீவுக்குமான சமாதான நீதவான்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளலாமென அறிவிக்கப்பட்டுள்ளது.

சுபீட்சமான இலங்கை எனும் தொனிப்பொருளில் இடம்பெறவுள்ள இம்மாநாடு, கிழக்கு மாகாணத்தை தொடர்ந்து நாட்டின் ஏனைய மாகாணங்களில் எதிர்வரும் காலங்களில் இடம்பெறவுள்ளது.

இன ஐக்கியம், சமாதானம், நீதி, மனித உரிமைகளை பாதுகாக்க கடந்த காலங்களில் இருந்தே இலங்கை சமாதான நீதவான்கள் பேரவை செயற்பட்டு வருகிறது.

கடந்த காலங்களில் சமாதானம் மற்றும் நீதியை நிலைநாட்ட பாடுபட்டவர்களுக்கு இந்நிகழ்வில் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர்.

குறித்த நிகழ்வில் பங்குபற்ற விரும்பும் சமாதான நீதவான்கள் 077-8614444 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு பேரவை கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor