முல்லைத்தீவில் இயக்குனர்கள் பாரதிராஜா, அமீர்!

முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவில் வசந்தநகர் பகுதியில் மாதிரி பண்ணை தென்னிந்திய திரைப்பட முன்னணி இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர் ஆகியோரால் திறந்துவைக்கப்பட்டுள்ளன.

லண்டனில் உள்ள சிறி கற்பக விநாயகல் ஆலயத்தின் நிதி பங்களிப்புடன் குறித்த பண்ணை இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சி.சிறிதரன், லண்டன் கற்பக விநாயகர் ஆலய ஸ்தாபகர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோரும் பங்குகொண்டிருந்தனர்.

திறப்பு நிகழ்வைத் தொடர்ந்து இயக்குநர் பாரதிராஜா, இயக்குநர் அமீர் ஆகியோர் கடந்தகால போராட்டம் தொடர்பிலும் சமகால நிலைப்பாடுகள் தொடர்பிலும் உரையாற்றினர்.


Recommended For You

About the Author: Editor