சானியா மிர்சா திருமணம் மறுப்பு!

விளையாட்டை உயிர் மூச்சாக கொண்டு இயங்கும் பெண்கள் சமூகத்தின் சில அர்த்தமற்ற பேச்சுக்களால் மனம் வெறுத்து போய்விடுகின்றனர். பலர் அதை புறந்தள்ளி வெற்றிக்கொடி நாட்டி வருகின்றனர்.

அந்த வகையில இந்திய டென்னிஸ் வரலாற்றில் தனக்கென்று தனியிடம் பிடித்து பல்வேறு சாதனைகள் செய்தவர் சானியா மிர்சா. இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை உலக அளவில் புகழ் பெற்ற டென்னிஸ் வீராங்கனைகளில் சானியா மிர்சாவும் ஒருவர்.

இந்தியாவை டென்னிஸ் அரங்கில் புகழ் பெற செய்த சாதனையாளர். பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது. குழந்தை பிறந்தததால் தற்காலிகமாக டென்னிஸ் போட்டிக்கு ஓய்வு கொடுத்து இருந்தார் சானியா. இவர் மீண்டும் விரைவில் களமிறங்கவுள்ளார்.

இந்நிலையில் இவர் ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது:

நான் சிறுமியாக இருந்தபோது வெளியில் சென்று விளையாடுவேன். அப்போது வெயில்பட்டு, உடல் கறுப்பாகி விடும். அப்படி நீ கறுத்து போய்விட்டால் யாரும் திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள் என்று உறவினர்கள் கூறுவார்கள்.

விளையாட்டில் மிகுந்த ஆர்வம் உள்ள பெண்களிடம் இதுபோன்று கூறுவதை அவர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

பெண்கள் அழகாக இருக்க வேண்டும் என்ற கலாச்சாரம் நமது மனதில் ஆழமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதை நியாயப்படுத்த சிலர் முயல்கின்றனர். இந்த கலாச்சாரம் மாற வேண்டும். விளையாட்டில் சாதிக்க துடிக்கும் பெண்கள் இது போன்று பேசும் உறவினர்கள் பேச்சை தான் கண்டுகொள்ளாமல், சாதிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.


Recommended For You

About the Author: Editor