முல்லை மக்களை நெருக்கடியில் தள்ளக்கூடாது -மனோ!!

யுத்தத்தினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மக்களை மீண்டும் வன்முறைகளுக்கோ, நெருக்கடிகளுக்கோ தள்ளக்கூடாது என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இதுவிடயமாக முல்லைத்தீவு ரஜமகா விகாரையின் விகாராதிபதிக்கு தான் தெளிவுபடுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முல்லைத்தீவு மாவட்டச்செயலகத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், “நீராவியடிப் பிள்ளையார் ஆலயம் தொடர்பாக ஆராய்ந்து பார்ப்பேன். அந்த ஆலயத்தின் பண்டைய வரலாறு உறுதிப்படுத்தப்படுமாகவிருந்தால், நீதிமன்றில் எமது அமைச்சு ஒரு தரப்பாக மாறி ஆலயத்தின் இருப்பை உறுதிப்படுத்தும்.

மேலும் யுத்தத்தினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மக்களுக்கு இலங்கையர்கள் எனும் உணர்வை ஊட்ட வேண்டுமென்று முல்லைத்தீவு ரஜமகா விகாரையின் விகாராதிபதிகளுக்கும் பொலிஸாருக்கும் கூறியுள்ளேன்.

மீண்டும் அவர்களை வன்முறைக்குத் தள்ளினால் அது பலிவாங்கும் செயலென்றும் அவர்களிடம் கூறியுள்ளேன்” என மேலும் தெரிவித்துள்ளார்.


Recommended For You

About the Author: Editor