தென்மராட்சியில் வாள் வெட்டுக்குழு அட்டகாசம்.

தென்மராட்சி மட்டுவில் சந்திரபுரம் பகுதியிலுள்ள வீடொன்றில் நுழைந்து வாள்வெட்டுக் குழு அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது.

குறித்த வீட்டில் இன்று அதிகாலை நுழைந்த நான்கு பேரடங்கிய குழு வீட்டின் கேற்,  வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மேட்டார் சைக்கிள் உட்பட வீட்டின் ஐன்னல் கண்ணாடிகளையும் அடித்து நொருக்கியுள்ளது.

இதனையடுத்து வீட்டில் இருந்தவர்கள் கூக்குரல்எழுப்பியதனையடுத்து, குறித்த ஆயுதக் கும்பல் தப்பித்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


Recommended For You

About the Author: ஈழவன்