குச்சவெளியில் வெடி பொருட்கள் மீட்பு.

திருகோணமலை – குச்சவெளி கடலில் மிதந்து கொண்டிருந்த வெடிபொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளன.

கடற்படை பேச்சாளர் அலுவகம் இதனைத் தெரிவித்துள்ளது.

இதன்போது கடலிலிருந்த மிதவையில் 4 டெட்டனேட்டர்களும் வெடிபொருள் 60 கிராமும் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை அறிவித்துள்ளது.

சட்ட விரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் மீனவர்களினால் இவை குறித்த பகுதிக்கு கொண்டுவரப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இதுகுறித்த விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது


Recommended For You

About the Author: ஈழவன்