மொட்டினை மாற்ற சட்ட ஆலோசனை!!

புதிய கூட்டணியொன்றை உருவாக்குவதற்காக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தாமரை மொட்டு சின்னத்தை மாற்ற முடியுமா என்பது தொடர்பில் ஆராயப்படவுள்ளததாக தெரிவிக்கபட்டுள்ளது.

அந்தவகையில் மொட்டினை மாற்றுவதற்கு தேவையான சட்ட ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இதனை அக்கட்சியின் பொதுச்செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர, தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

அத்துடன் புதிய கூட்டணிக்காக தாமரை மொட்டு சின்னத்தினை தவிர வேறு சின்னமொன்றை பயன்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தாங்கள் உறுதியாக உள்ளதாகவும் அவர் இதன்போது மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor