டி.வி.ஏ தொலைக்காட்சியில் கனேடிய தலைவர்கள் நேருக்கு நேர் விவாதம்!

கனேடிய தேர்தலை ஒட்டி இடம்பெற்ற அரசியல் கட்சித் தலைவர்களுக்கிடையிலான தொலைக்காட்சி விவாதத்தில் மதச்சார்பின்மை மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் மையக் கருவாக எதிரொலித்தன.

கன்சர்வேடிவ் தலைவர் ஆண்ட்ரூ ஷீயர், புதிய ஜனநாயகக் கட்சி தலைவர் ஜாக்மீத் சிங், பிளாக் கியூபாகோயிஸின் யவ்ஸ்-பிரான்சுவா பிளான்செட் மற்றும் லிபரல் தலைவர் ஜஸ்டின் ட்ரூடோ ஆகியோர் புதன்கிழமை இரவு பிரெஞ்சு மொழியில் இடம்பெற்ற டி.வி.ஏ தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்றனர்.

ஒக்., 21 நடைபெறவுள்ள கனேடிய தேர்தலுக்கு இன்றும் மூன்று வாரங்களுக்கு சற்று குறைவான காலப்பகுதியே உள்ள நிலையில் தொலைக்காட்சி விவாதத்தில் லிபரல் தலைவர் ட்ரூடோ முதல் முறையாக இணைந்துகொண்டார்.

கியூபெக்கில் சில பொதுத்துறை ஊழியர்கள் தமது பணியின் போது மதச் சின்னங்களை அணிவதைத் தடைசெய்யும் சர்ச்சைக்குரிய மதச்சார்பின்மைச் சட்டம் குறித்த வாதம் இந்த விவாதத்தில் இடம்பெற்றது.

பெக்கர்களால் இந்தச் சட்டம் பரவலாக ஆதரிக்கப்படுகிறது என்றும் அதை சவால் செய்யக்கூடாது என்றும் பிளான்செட் சுட்டிக் காட்டினார்.ஆனால் லிபரல் தலைவர் ட்ரூடோ தனது தலைமையில் அரசமைந்தால் இந்த விடயத்தில் தலையீடு செய்யும் என்றார்

தேவாலயத்தையும் அரசையும் பிரித்துப் பார்ப்பது முக்கியமானது. சமூக பாகுபாட்டை சட்டமாக்கக் கூடாது என அவர் வாதிட்டார்.

தலைப்பாகை அணிந்த சீக்கியரான சிங், மத அடையாளங்களை தடை செய்வது பாரபட்சமானது என்று தனது நிலைப்பாட்டில் உறுதியாக நின்றார்.

இதேவேளை, கியூபெக் சட்டத்தில் தான் தலையிட மாட்டேன் என ஷீயர் கூறினார்.
விவாதத்தில் எண்ணெய் குழாய்த் திட்டம் குறித்து அதிக விமர்சனங்களை ட்ரூடோ எதிர்கொண்டார்.

எரிபொருட்களிலிருந்து விலகி பசுமைப் பொருளாதாரத்தை நோக்கி நகர கனடாவுக்கு கால அவகாசம் தேவை என ட்ரூடோ வாதிட்டார்.

கனடாவில் மற்றவர்களை விட தனது அரசாங்கம் சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கான அதிகமாக உழைத்து வருவதாகவும் ட்ரூடோ கூறினார்.

ட்ரூடோவில் இரண்டு பிரச்சார விமானங்கள்உள்ளன என்று சுட்டிக்காட்டி கன்சர்வேடிவ் தலைவர் ஷீயர் விமர்சித்தார்.

பசுமைக் கட்சித் தலைவர் எலிசபெத் மே மற்றும் கனடாவின் மக்கள் கட்சித் தலைவர்கள் மாக்சிம் பெர்னியர் ஆகியோர் இந்த விவாதத்திற்கு அழைக்கப்படவில்லை.

கனடியர்கள் தமது அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்னர் இன்னும் இரண்டு விவாதங்கள் நடைபெறவுள்ளன.

ஒக். 7 ஆம் திகதி இரவு இரண்டு மணி நேர ஆங்கில மொழி விவாதம் நடைபெறவுள்ளது.
இறுதி விவாதம் பிரெஞ்சு மொழியில் அக்., 10 ஆம் திகதி நடத்தப்படவுள்ளது


Recommended For You

About the Author: Editor