குச்சவெளிக் கடற்பரப்பில் வெடிபொருட்கள் மீட்பு!

திருகோணமலை – குச்சவெளி கடற்பரப்பில் மிதந்து கொண்டிருந்த வெடிபொருட்கள் சில கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளன.

கடலிலிருந்த மிதவையில் 4 டெட்டனேட்டர்களும் வெடிபொருள் 60 கிராமும் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை அறிவித்துள்ளது.

மீட்கப்பட்ட வெடிபொருட்கள் தொடர்பில் கடற்படையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


Recommended For You

About the Author: Editor