அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா தலையிடும்: புடின் அதிரடி!!

2020 அமெரிக்க தேர்தலில் ரஷ்யாவின் பங்கு இருக்குமா என்ற கேள்விக்கு, நிச்சயமாக எங்கள் பங்கு இருக்கும், ஆனால் அது மிகவும் ரகசியமான ஒன்று, யாரிடமும் கூற வேண்டாம் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கூறியுள்ளார்.

கடந்த புதன்கிழமை அன்று மாஸ்கோவில் நடந்த எரிபொருள் மாநாட்டில் பங்கு பெற்ற ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், 2020 அமெரிக்க தேர்தலில் ரஷ்யாவின் பங்கு இருக்குமா என்ற பத்திக்கையாளரின் கேள்விக்கு, நிச்சயமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

இது குறித்த அவர் பேசுகையில், “2020 அமெரிக்க தேர்தலில் ரஷ்யாவின் பங்கு நிச்சயமாக இருக்கும். ஆனால் அது யாருக்கும் தெரியாது. நீங்களும் யாரிடமும் கூறாமல் ரகசியமாக வைத்துக் கொள்ளுங்கள்” என சிரித்துக் கொண்டே கூறியுள்ளார்.

மேலும், 2016 ஆம் ஆண்டு தேர்தலில் அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு ரஷ்யா ஆதரவு அளித்ததாக கூறப்பட்ட முல்லர் அறிக்கையை தொடர்ந்து எழுப்பட்ட கேள்விக்கு, முன்பு நாங்கள் அவருக்கு ஆதரவளித்ததாக அந்த அறிக்கையில் நிரூபிக்கப்படவில்லை ஆனால் இந்த முறை நாங்கள் உண்மையாகவே அவருக்கு ஆதரவு அளிக்கலாம் என்று கூறினார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தான் பதவியேற்ற போது அளித்த உறுதிமொழியை மீறி செயல்பட்டுள்ளார் என்று அமெரிக்க நாடாளுமன்ற அவைத் தலைவர் நான்சி பெலோசி, அவர் மீது விசாரணை மேற்கொண்டிருந்தார்.

இது குறித்த கேள்விக்கு, “எந்த ஒரு நாட்டு தலைவரும் தனக்கு முன்னர் இருந்தவர்கள் ஏதேனும் தவறு செய்துள்ளனரா என்று அறிந்துக் கொள்ள முற்படுவது இயல்பான ஒன்றே. இதை குற்றமாக கருதுவது சரியென்று எனக்கு தோன்றவில்லை.

ஏதேனும் ஒரு வழியில் ட்ரம்பை தாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படுபவர்களுக்கு இந்த பிரச்சனை ஒரு கருவியாக அமைந்திருக்கிறது அவ்வளவுதான்” என்று ட்ரம்பிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்.

தேர்தல் நேரத்தில் ட்ரம்ப், அவருடன் போட்டியிட்ட முன்னாள் துணை அதிபர் ஜோ பிடனின் வாக்குகள் குறித்து, உக்ரேன் நாட்டின் தலைவரை கண்காணிக்க கூறியுள்ளார் என, அமெரிக்க நாடாளுமன்ற அவைத் தலைவர் நான்சி பெலோசி, ட்ரம்ப் மீது குற்றம் சுமத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும், ட்ரம்ப் மற்றும் உக்ரேன் நாட்டின் தலைவர் இருவரும், குற்றம் சுமத்தும் வகையில் எதுவும் பேசவில்லை என்பது இருவரின் தொலைபேசி பதிவின் மூலம் தெரிய வந்துள்ளது


Recommended For You

About the Author: Editor