12 ஆவது தளத்தில் இருந்து விழுந்த பெண் !

செவ்வாய்க்கிழமை இரவு பெண் ஒருவர் 12 ஆவது தளத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

Ivry-sur-Seine (Val-de-Marne) இல் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 20:30 மணிக்கு காவல்துறையினர் அழைக்கப்பட்டனர்.

குறித்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 21 வயதுடைய குறித்த பெண் அவரது பெற்றோர்களின் வீட்டில் இருந்ததாகவும், அப்பெண்ணின் கணவரும் அதே வீட்டில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த பெண் அங்கிருந்து தற்கொலை செய்துகொள்ள குதித்துள்ளாரா அல்லது தள்ளிவிடப்பட்டாரா என காவல்துறையினர் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்த பெண் முன்னதாகவே தனது கணவரால் பல தடவைகள் துன்புறுத்தலுக்கு ஆளானதாக அவரின் பெற்றோர்கள் தெரிவித்தனர். பின்னர் சடலம் மீட்கப்பட்டதோடு, அப்பெண்ணின் கணவர் கைதும் செய்யப்பட்டுள்ளார்.

இவ்வருடத்தில் குடும்ப வன்முறை காரணமாக இடம்பெறும் 122 ஆவது உயிரிழப்பு இதுவாகும்.


Recommended For You

About the Author: Editor