நாடு முழுவதும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்!!

நாடு முழுவதும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஒன்று இன்று முதல் முன்னெடுக்கப்படவுள்ளது.

தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு இதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளது.

மேல், தென், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் டெங்கு தொற்று அதிகரித்து வருகின்ற நிலையில், குறித்த மாகாணங்களை மையப்படுத்தி இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இன்று முதல், நான்காம் ஐந்தாம் திகதிகளிலும் இந்த வேலைத்திட்டம் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் மழைக்குப் பிந்திய காலப்பகுதியில் டெங்கு நுளம்புகளின் பெருக்கம் அதிகரிக்கும் ஆபத்து இருப்பதால், தங்களது வாழ்விட சுற்றுசூழலை பொதுமக்கள் சுத்தமாகவும், நீர் தேங்காத வண்ணமும் பேணுமாறு அறிவுறுத்தப்பட்டுளளது.


Recommended For You

About the Author: Editor