லொறி குடைசாய்ந்து விபத்து!!

வவுனியா மடுகந்தை தேசிய பாடசாலைக்கு முன்பாக லொறி குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவிலிருந்து இன்று (செவ்வாய்க்கிழமை) காலை திருகோணமலை நோக்கி எரு ஏற்றிக்கொண்டு பயணித்த லொறியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில் லொறியில் பயணித்த 7 பேரும் காயங்களுக்குள்ளாகியுள்ள நிலையில் சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த மடுகந்தை பொலிஸார் போக்குவரத்தினை சீர்செய்ததுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்


Recommended For You

About the Author: Editor