அனுராதபுரத்தில் குழு மோதல்

அனுராதபுரத்தில் இரு முஸ்லிம் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக மூன்று பேர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கெப்பத்திக்கொல்லாவ பள்ளிவாசலுக்கு அருகில் இந்த மோதல் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

பயங்கரவாத அமைப்பான தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்புடன் தொடர்புடையவர்கள் குறித்து தகவல்களை வழங்கிய நபர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எல்லவெவ பிரதேச வீட்டில் ரம்ழான் பெருநாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட விருந்தில் கலந்து கொண்ட வேளையில் இரு குழுக்களுக்கு இடையில் வாய்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

விருந்தினை முடித்துக் கொண்டவர்கள் வீடு நோக்கி செல்லும் போது, இரு தரப்பிற்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தராறு மோதலாக மாறியுள்ளது. பின்னர் எல்லவெவ பள்ளிவாசலுக்கு அருகில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விருந்தில் கலந்து கொண்ட 30 வயதான கடற்படை அதிகாரி, 26 மற்றும் 31 வயதுடைய மூவரே இவ்வாறு காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும் முஸ்லிம்கள் என தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக கெப்பத்திக்கொல்லாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்


Recommended For You

About the Author: Editor