கோட்டாவே வேட்பாளர். – மஹிந்த உறுதி

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ வேறு சின்னத்தில் போட்டியிடுவதற்கு சட்டரீதியாக சிக்கல் உள்ளதென எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பெபிலியானவில் ஊடகவியலாளர்களை சந்திந்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்த மேலும் கூறியுள்ளதாவது,

‘கோட்டாபயதான் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் என்பதில் உறுதியாக  இருக்கின்றோம். இவ்விடயத்தில் இரண்டாவது தீர்மானம் ஏதும்  கிடையாது.

இதேவேளை சுதந்திரக்கடசியுடன் நாங்கள் மாத்திரமல்ல சஜித் பிரேதாஸவும் கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றார்.

ஆகையால் இவ்விடயத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவை பெறமுடியுமென்பதில் எதிர்பார்ப்புடன் இருக்க வேண்டாமென கோட்டாவிடம் கூறியுள்ளேன்.

எது எவ்வாறாயினும் ஐக்கிய தேசிய கட்சியில்  ஜனாதிபதியாக வரும் ஒருவரால்  சிறந்த சேவையை மக்களுக்கு நிச்சயம் ஆற்றமுடியாது.

மேலும் பிரதமர் ரணில் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. எம்மீதே அவர்களுக்கு அதிக நம்பிக்கை உள்ளது. ஆகையால் நாங்களே நிச்சயம் வெற்றியடைவோம்.

இதேவேளை ஒரு கட்சி வேட்பு மனுவை தாக்கல் செய்த பின்னர் மற்றொரு கட்சியுடன் மீண்டும் சென்று வேட்பு மனுவை தாக்கல் செய்தால் இரத்து செய்வதற்கு வாய்ப்புள்ளது.

ஆகையால் சின்னத்தை மாற்றுவது என்பது சட்டரீதியான பிரச்சினையாகும்” என குறிப்பிட்டுள்ளார்.


Recommended For You

About the Author: ஈழவன்