எமது போராட்டத்திற்கு அரசாங்கமே தூண்டு கோள்.

வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு அரசாங்கமே தூண்டுகோலாக இருப்பதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கொடுப்பனவுகள் மற்றும் சம்பள முரண்பாடுகளுக்கு தகுந்த தீர்வினை பெற்றுத்தர தவறும் பட்சத்தில் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாகவும் சங்க அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

கொழும்பில் நேற்று (புதன்கிழமை) அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்க தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலளர் சந்திப்பின்போதே குறித்த சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அளுத்கே இவ்வாறு கூறினார்.

இலங்கை நிர்வாக சேவை அதிகாரிகள் அடங்கலாக நிறைவேற்று அதிகாரிகளின் கொடுப்பனவுகளுக்கு உரித்துடைய அனைவருக்கும் சேவைக்காலத்தை பொருட்படுத்தாது 15 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை வழங்க நேற்று அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது.

இந்நிலையில் நோயாளிகளின் நலனை கருத்திற்கொண்டு தொடர் வேலை நிறுத்தத்தினை முன்னெடுக்காத வைத்தியர்களின் கோரிக்கைக்கு தகுந்த தீர்வு இது வரையில் காணப்படவில்லை எனவும் அந்த சங்கத்தினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை, தமது அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக தீர்க்கமான முடிவை எடுப்பதற்கான சங்கத்தின் மத்தியக்குழு கூட்டம் நாளை இடம்பெறவுள்ளதாகவும் இதன்போது தொடர் வேலை நிறுத்தத்தை மேற்கொள்வதற்கான உறுதியான முடிவுகள் எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.


Recommended For You

About the Author: ஈழவன்