ஐ.தே.க. தேசிய மாநாடு

உ க்கிய தேசியக் கட்சியின் 73 ஆவது மாநாடு கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது.

கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று (வியாழக்கிழமை) காலை 9.30 மணிக்கு இடம்பெறவிருக்கும் இந்த மாநாட்டில்  கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரும் அமைச்சருமான சஜித் பிரேமதாச உள்ளிட்ட கட்சியின் பிரமுகர்கள் பலர் கலந்துகொள்ளவுள்ளர்கள் .

கடந்த மாதம் முலாம் திகதி மாநாடு இடம்பெறவிருந்தது. கட்சிக்குள் எழுந்த அரசியல் குழப்பங்களின் காரணமாக இன்றைய தினத்தில் அதனை நடத்த தீர்மானிக்கப்பட்டது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி சார்பாக ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச கட்சியின் செயற்குழுவால் முன்மொழியப்பட்டார். இதனை கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்திருந்தார்.

இந்நிலையில், ஐக்கிய தேசிய முன்னணியின் மாநாட்டில் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவை முன்னிறுத்தி அறிமுகப்படுத்தும் நிகழ்வு இடம்பெறவுள்ளதாக அஜித் பீ.பெரேரா தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்