தொழிற்சங்கம் விடுத்துள்ள அறிவிப்பு!!

நடைபெற்றுவரும் தொழிற்சங்க போராட்டங்களினால் வேலைக்கு திரும்பாத ஊழியர்கள் மீண்டும் சேவையில் ஈடுபடவில்லை என்றால் அவர்கள் இராஜினாமா செய்தவர்களாக கருதப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பினை இலங்கை ரயில்வே திணைக்களம் இன்று (புதன்கிழமை) விடுத்துள்ளது.

கடந்த 7 நாட்களாக சம்பள முரண்பாட்டை அடிப்படையாகக் கொண்டு, ஆரம்பிக்கப்பட்ட இந்த பணிப்பகிஷ்கரிப்பில் ரயில் சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள், ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் மற்றும் கண்காணிப்பு அதிகாரிகள் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor