தேர்தல் ஆயத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன- மஹிந்த தேசப்பிரிய!!

ஜனாதிபதி தேர்தலுக்கான ஆயத்த நடவடிக்கைகள் அனைத்தையும் தேர்தல்கள் ஆணைக்குழு மேற்கொண்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்தும் தெரிவித்த அவர்,

“17 பேர் இதுவரை கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். இதில் 8 வேட்பாளர்கள் சுயாதீன வேட்பாளர்களாக கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கட்சிகளில் இருந்து 9 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

எதிர்வரும் 6ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, 8.30 மணி முதல் 12.30 மணி வரை கட்டுப்பணத்தை செலுத்த முடியும்.

இதனையடுத்து 7ஆம் திகதி திங்கட்கிழமை காலை 9 மணியிலிருந்து 11 மணிவரை வேட்புமனுத்தாக்கல் செய்யப்படவுள்ளது.

இதற்கான ஆயத்த நடவடிக்கைகள் அனைத்தையும் தேர்தல்கள் ஆணைக்குழு மேற்கொண்டு வருகிறது” என மேலும் தெரிவித்தார்.


Recommended For You

About the Author: Editor