டுவிட்டர் சமூக வலைத்தளம் முடக்கம்!

டுவிட்டர் மற்றும் டுவீடெக் ஆகிய இரண்டு சமூக வலைத்தளங்களின் சேவைகள் முடங்கியுள்ளதாக சர்வதேச செய்தித் தளங்கள் தெரிவிக்கின்றன.

இது உலகளாவிய ரீதியில் செயலிழந்துள்ளதாக தெரிவிக்கின்றது. டுவிட்டர் நிறுவனம் இது குறித்து சிக்கல்களை அறிந்திருப்பதாகவும் சிக்கலை விசாரிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

எனவே நீங்கள் புதிய நேரடியான தரவுகளை ( டி.எம்.) களைப் பெறமாட்டீர்கள் அல்லது உங்கள் டுவீட்களில் படங்கள், வீடியோக்கள் மற்றும் கருத்துக்கணிப்புகளை இணைப்பதில் சிக்கல் உள்ளது என டுவிட்டர் சமூகவலைத்தளம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, தற்போது ஏற்பட்டுள்ள நிலமை குறித்து அவதானித்து வருவதாகவும், அறிவிப்புகளைப் பெறுவது அல்லது டி.எம்-களைப் பார்ப்பதில் பயனர்களுக்கு சிக்கல் ஏற்பட்டிருக்கலாம்.
நாங்கள் தற்போது அதற்கு ஒரு தீர்வைப் பெறுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம் என்று டுவிட்டர் நிறுவனம் தனது டுவீட்டரில் தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: Editor