பதவியை இழந்தவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டி

முன்னாள் கட்டார் நாட்டின் தூதர் மற்றும் இலங்கை தொழிலாளர் கட்சி தலைவர் ஏ.எஸ்.பி.லியனகேயும், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.

இன்று தனது கட்டுப்பணத்தை செலுத்துவேன் என்றும் தெரிவித்துள்ளார்.

மார்ச் 2017 இல் கட்டார் தூதராக நியமிக்கப்பட்ட அவர் சர்ச்சைகளுக்கு பின்னர் இந்த ஆண்டு தொடக்கத்தில் இராஜினாமா செய்தார்.

அண்மையில் ஆளுநர்கள் மாற்றியமைக்கப்பட்டபோது ஆளுநராக நியமிக்கப்படுவார் என்று அவர் எதிர்பார்த்திருந்தார். ஆனால் அவர் ஆளுநராக நியமிக்கப்படவில்லை.

2010 மற்றும் 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் லியனகே போட்டியிட்டார்.

இதற்கமைய கடந்த 2010ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் மூன்றாவது அதிக வாக்குகளையும் பெற்றிருந்தார்.

2017ஆம் ஆண்டு கட்டாருக்கான தூதுவராக நியமிக்கப்பட்ட ஏ.எஸ்.பி லியனகே, டுபாய் சென்ற யோசித ராஜபக்ஷ, ரோகித ராஜபக்ச ஆகியோரின் பயணப் பையை தூக்கிச் சென்ற ஒளிப்படங்கள் வெளியானதை அடுத்து, பதவியில் இருந்து நீக்கப்பட்டிருந்தார்.

இதேவேளை, இவர் கடந்த காலங்களில் மஹிந்தவிற்கு மிகவும் நெருக்கமாகவும் செயற்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது


Recommended For You

About the Author: Editor