இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் விடுத்துள்ள அறிவிப்பு!!

எதிர்வரும் 07ஆம் திகதி தொடக்கம் 11ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் பாடசாலைகள் அனைத்திலும் முன்னெடுக்கப்படவிருந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.

சம்பள முரண்பாடுகள் தொடர்பாக அமைச்சரவை வழங்கிய தீர்மானம் தொடர்பில் கலந்துரையாடல்களை மேற்கொண்டதன் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் தீர்மானிக்கவுள்ளதாக குறித்த சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க எமது ஹிரு செய்திக் குழுவிடம் தெரிவித்தார்.


Recommended For You

About the Author: Editor