எரிவாயு கசிவு! – 50 பேர்வரை வெளியேற்றம்..!!

பரிஸ் ஒன்பதாம் வட்டாரத்தில் ஏற்பட்ட எரிவாயு கசிவை அடுத்து 50 பேர்வரை வெளியேற்றப்பட்டனர்.

நேற்று முன்தினம் திங்கட்கிழமை மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பரிஸ் 9 ஆம் வட்டாரத்தின் rue Ambroise Thomas வீதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் எரிவாயு கசிவு ஏற்பட்டுள்ளது. உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் குறித்த கட்டிட்டத்தில் வசித்த 50 பேர் வரையான மக்களை வெளியேற்றினர். பின்னர் GRDF (பிரான்சுக்கான எரிவாயு வழங்குனர்கள்) அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு படையினர் சிலமணிநேர போராட்டத்தின் பின்னர் நிலமை வழமைக்குத் திரும்பியுள்ளது.

இச்சம்பவத்தில் எவரும் பாதிப்புக்குள்ளாகவில்லை. நிலமை வழமைக்குத் திரும்பியதன் பின்னர் பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு மீண்டும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

கடந்தவருடத்தில் இதே பகுதியில் ஏற்பட்ட பெரும் எரிவாயு வெடிப்பு மற்றும் தீ விபத்தில் நால்வர் பலியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor